உத்தியோகத்தர்கள் பாராட்டி கௌரவிப்பு
நூருல் ஹூதா உமர்
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட அடைவைப் பெற்றுக் கொண்டமைக்காக சாய்ந்தமருது பிரதேச செயலக பிரிவுகளில் வழிநடத்திய கிளைகளின் தலைவர்கள் மற்றும் கிராம மட்டத்தில் அதிகளவான பங்களிப்பு செய்த உத்தியோகத்தர்களை பாராட்டி கௌரவிக்கின்ற நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் மற்றும் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ. ஹமீட், கணக்காளர் ஏ.ஜே.நுஸ்ரத் பானு , நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர், சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.ஏ. சபீர், கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.ஐதாக், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏ.எம்.நளீம், ஜே.எம். றம்ஸா ஆகியோருக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
கருத்துக்களேதுமில்லை