காத்தான்குடி பெண்கள் காப்பகத்துக்கு முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்!

 

நூருல் ஹூதா உமர்

காத்தான்குடி பெண்கள் காப்பகத்தின் தலைவரும் முன்னாள் காத்தானக்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்சாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம். எல். எம். ஏ. ஹிஸ்புல்லாஹ் விஜயம் செய்தார்.

இந்தப் பெண்கள் காப்பகம் தொடர்பான அன்றாட நடவடிக்கைகளை பார்வையிட்டதோடு , எதிர்காலத்தில் இந்தக் காப்பகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பாக காப்பகத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களோடு கலந்துரையாடினார்.

மேலும் காப்பகத்தில் பராமரிக்கப்படுகின்ற பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்களைச் சந்தித்து அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து கொண்டார். மேலும் எதிர்வரும் காலங்களில் இந்தக் காப்பகத்தின் அபிவிருத்தியில் தனது முழுமையான பங்களிப்பைத் தருவதாக முன்னாள் ஆளுநர் இதன்போது குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் பெண்கள் காப்பகத்தின் தலைவர் கலாநிதி சல்மா அமீர் ஹம்சா அதன் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.