இரணைமடு குடிநீர்த் திட்டத்தை தொடர்வதில் அரசியல் பிரச்சினை ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டு

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் கொண்டு செல்வதற்கான திட்டத்தை தொடர்ந்தும் செயற்படுத்துவதில் பாரிய அரசியல் பிரச்சினை இருப்பதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இரணைமடு குளத்தைப் புனரமைத்து யாழ்ப்பாணம் உட்பட ஏனைய மாவட்டங்களுக்கு நீரை வழங்க நடவடிக்கை எடுத்தால் பல பிரச்சினைகள் வரும் என கூறி பலதரப்பினரும் அதற்கு எதிர்ப்பை வெளியிடுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.