நாட்டின் வைத்தியசாலைகளின் நிர்வாகத்தில் மலர்சாலை உரிமையாளரையும் இணையுங்கள் சரத் பொன்சேகா சீற்றம்

வைத்தியசாலைகளின் நிர்வாக சபைக்கு, மலர்சாலையின் உரிமையாளரையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர்; மேலும் தெரிவிக்கையில் –

‘பேராதனை வைத்தியசாலையில் 21 வயது யுவதியொருவர் மருந்து ஒவ்வாமையால் உயிரிழந்தார். இந்த மருந்தை பயன்படுத்தி ஏற்கனவே நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், அண்மையில் கேகாலை வைத்தியசாலையிலும் இதே தடுப்பூசி செலுத்தப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.

குளியாப்பிட்டியவில் 4 மாதக் குழந்தையும் மருந்து ஒவ்வாமையால் உயிரிழந்தது. இவ்வாறு இருக்கையில், இவ்வாறு மரணங்கள் நிகழ்வது சாதாரண ஒரு விடயமாகும் என்று அரசாங்கத்தின் அடிவருடிகள் தொலைக்காட்சிகளில் கருத்து வெளியிடுகிறார்கள்.

ஐரோப்பா போன்றதொரு நாட்டில் மருந்து விசமடைந்து ஒருவர் உயிரிழந்தால், சுகாதார அமைச்சர் முதல் கீழ்தட்டு அதிகாரிவரை, அனைவரும் சிறையில்தான் இருப்பார்கள்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சரோ வைத்தியசாலையில் மரணங்கள் இடம்பெறுவது சாதாரணமான விடயம் என்பதால்தான், வைத்தியசாலைகளுக்கு உள்ளே பிணவறையும், வைத்தியசாலைக்கு வெளியே மலர்சாலைகளும் இருக்கின்றன எனக் கூறியுள்ளார்.

அப்படியென்றால், இனிமேல் வைத்தியசாலைகளின் நிர்வாக சபைக்கு, அருகில் உள்ள மலர்சாலையின் உரிமையாளரையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

அப்படியென்னால், இன்னமும் இந்த விடயத்தை இலகுபடுத்திக் கொள்ளலாம். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.