ஜனாதிபதியின்மேல் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்! ஈ.பி.ஆர்.எல்.எப். இரா.துரைரட்ணம் தெரிவிப்பு
சிறுபான்மை மக்களுக்கான நல்ல தீர்வை எட்டப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதியின் மேல் நம்பிக்கை வைத்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.
கையில் உள்ளவற்றை இல்லாமல்செய்யும் நடவடிக்கைகளுக்கு தமிழ் மக்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள். தமிழர் தாயப் பகுதியின் அதிகாரப்பகிர்வு தொடர்பில் இழுத்தடிப்பு செய்யும் அரசியல் கட்சிகள் அவற்றை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த வேண்டுகோளை அவர் முன்வைத்துள்ளார்.
மேலும் 13 ஆவது திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கான சாதகமான சூழ்நிலைகள் உருவாகிவரும் நிலையில் சில தமிழ்க் கட்சிகள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை,
நிராகரிக்கின்றோம் என்று சொல்வது அவர்களுக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் நீண்டகாலமாக வடக்கு, கிழக்கில் இது தொடர்பில் பேச்சுகளில் ஈடுபடுபவர்களுக்கும் மக்களுக்கும் ஏற்புடையதல்ல எனவும் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை