கனடா பிரதமரின் தமிழ் இனப்படுகொலை கருத்தை மீண்டும் நிராகரித்தது இலங்கை

கறுப்புஜூலை குறித்த அறிக்கையில் கனடா பிரதமர் தமிழ் இனப்படுகொலை நினைவுதினம் குறித்து தெரிவித்துள்ளதை இலங்கை நிராகரித்துள்ளது.

கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உள்ளூர் வாக்குவாங்கி தேர்தல் நலன்களுக்காக கனடா இலங்கையில் கடந்தகால மோதல்கள் பற்றிய தவறான கதையை தொடர்ந்து குறிப்பிடுகின்றது எனத் தெரிவித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, இது சமூக ஐக்கியம் என்ற இலக்கை அடைவதற்கு உகந்தது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

ஸ்திரதன்மை, முன்னேற்றம், அமைதி, நல்லிணக்கம் ஆகியவற்றை இலங்கையின் அனைத்து மக்கள் மத்தியிலும் இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளில் வாழும் இலங்கை பாரம்பரியத்தை கொண்ட சமூகங்கள் மத்தியிலும் ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு கனடாவும் அதன் தலைவர்களும் ஆதரவளிக்கவேண்டும் என இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.