நீர்கொழும்பில் காணாமற் போன யுவதி குறித்து பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு!

நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது  குறித்து அறிவிப்பை வெளியிட்ட பொலிஸார், இது தொடர்பில் யுவதியின் தந்தையால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயத்திரி தேவ்ஷானி சூரியசிங்க என்ற யுவதியே  காணாமல் போயுள்ளார் எனவும், இவர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனவே, இவர்  தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீர்கொழும்பு பொலிஸ் – 071-8 591 630 நீர்கொழும்பு பொலிஸ் – 031- 2 222 227

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.