மட்டுவிலில் மூதாட்டி கொலை – திடுக்கிடும் தகவல்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் வடக்குப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த 82 வயதுடைய மூதாட்டி ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த மூதாட்டி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நேற்றுப் பகல் குறித்த வீட்டுக்குச் சென்ற அயல் வீட்டுப் பெண்ணொருவரால் குறித்த பெண் சடலமாக இருப்பது அவதானிக்கப்பட்ட நிலையில் அப்பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கப்பட்டது.
தம்பையா சறோஜா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார்.
குறித்த மூதாட்டி தான் வசித்து வந்த காணியை விற்பனை செய்துள்ளார். காணியை வாங்கியவர்கள் மூதாட்டியின் ஆயுட்காலம் வரம் வரை அங்கு வாழலாம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
காணி விற்ற பணத்தை மூதாட்டி வைத்திருந்ததாகவும், மூதாட்டி அணிந்திருந்த தோடும் காணாமல் போயுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூதாட்டியின் மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவி வந்த நிலையில், அவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை