கிழக்கு மாகாணப் போட்டிகளில் கலந்துகொள்ள கல்முனை பஹ்ரியாவிலிருந்து 20 வீரர்கள் தெரிவு!
நூருல் ஹூதா உமர்
கல்முனை கல்வி வலய மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில் கல்முனை கமுஃகமுஃஅல்-பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) 24 மாணவ, மாணவிகள் வெற்றியீட்டி கிழக்கு மாகாணமட்ட மெய்வல்லுநர் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றன. இதில் கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவ மாணவிகள் 29 விளையாட்டு நிகழ்ச்சிகளில் 13 முதலாம் இடங்கள், 07 இரண்டாம் இடங்கள், 09 மூன்றாம் இடங்கள் பெற்று அதில் (20 விளையாட்டு நிகழ்ச்சிகளில் தெரிவு செய்யப்பட்டு) எதிர்வரும் 19-09-2023 இல் நடைபெற இருக்கின்ற மாகாணமட்ட மெய்வல்லுநர் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால், பிரதி அதிபர்களான எம்.ஏ.அஸ்தார், எம்.எஸ். சலாம், உதவி அதிபர் றினோஸ் ஹஜ்ரின், உடற்கல்வி பொறுப்பாசிரியர்கள் யூ.எல். ஷிபான், எம்.எஸ். பளீல் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம். றியால், ஏ.வீ.எம். ஆஷாட் கான் ஆகியோருக்கு பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு, பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை