நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள்!
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம் பெற்றது.
முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன.
அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடேற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது.
பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
கருத்துக்களேதுமில்லை