மீண்டும் இலங்கை வந்துள்ளார் ரஜனி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இலங்கை ஊடாக இந்தியா செல்லும் வழியில், பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் ‘கோல்ட் ரூட்டில்’ சிறிது நேரம் ஓய்வெடுத்துள்ளார்.

அதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், நடிகர் ரஜினிகாந்த் விமான நிலைய ஊழியர்களுடன், விமான நிலையத்தின் ‘கோல்ட் ரூட்’ஸில் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது முறையாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ‘கோல்ட் ரூட்’ வழியை பயன்படுத்தியதாக விமான நிலைய ஊழியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.