தொண்டமனாறில் 5 முதலைகள் பிடிப்பு
வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (28) 5 முதலைகள் தொடர்ச்சியாக பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை