மனித புதைகுழிகள் செம்மணியில் இருந்து கொக்கு தொடுவாய் வரை தொடர்கிறது
மனிதப் புதைகுழிகள் தொடர்கதை செம்மணியில் இருந்து கொக்குத்தொடுவாய் வரை நீண்டு செல்வதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் நேற்று (28) இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த மனிதப் புதைகுழிகளுக்கான நீதி இற்றைவரை கிடைக்கப்பெறவில்லை. எனவே, ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் காலதாமதமின்றி உடனடியாக இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை ஆரம்பிக்கவேண்டும்.
அதற்கு முன்னர் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி சர்வதேச கண்காணிப்போடு, சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் தொடரவேண்டும்”. என்றார்.
கருத்துக்களேதுமில்லை