யாழில் வைத்தியரின் வீடுக்குள் புகுந்து ரவுடிக் கும்பல் அட்டூழியம்
யாழ்ப்பாணம் – கந்தர்மடத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீடு ரவுடிக்கும்பலால் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் இன்று (29) அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னரும் குறித்த வைத்தியரின் வீட்டுக்குள் நுழைந்த ரவுடிக் கும்பல் அட்டூழியத்தில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
காணி உரிமை தொடர்பான தகராற்றில் இந்த தாக்குதல் தொடரப்படுவதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை