பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்பான வழக்கு நவம்பர் 23க்கு ஒத்திவைப்பு!

கவனயீனமாக வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு இன்று (31) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பிரதிவாதியான பாட்டலி சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பில் பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றுமொரு மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி வழக்கை நவம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.