திருமலை வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் பாலத்தின் நிர்மாண பணிகளை உடன் நிறைவு செய்க! அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்பாடு

 

திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பூரண மேற்பார்வையின் கீழ் உள்ளூர் ஒப்பந்த நிறுவனம் ஒன்றால் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த புதிய கட்டையார் பாலம் 25 மீற்றர் நீளமும் 5 மீற்றர் அகலமும் கொண்டது. இந்த பாலம் அமைப்பதற்கு 5 கோடி ரூபா செலவிடப்படவுள்ளது.

நிர்மாணப் பணிகளை விரைவாக நிறைவு செய்து பொதுமக்களின் போக்குவரத்துக்காக பாலத்தை திறந்து வைக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இந்த கண்காணிப்பு விஜயத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண அலுவலக அதிகாரிகள் மற்றும் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் உட்பட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.