யாழில் முதியவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் தனிமையில் வாழ்ந்து வந்ந முதியவர் ஒருவர் சடலமாக நேற்றிரவு (01) மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில் தங்கியிருந்துள்ளார். அவர் குறித்த ஆலயத்தில் பணி புரிந்தும் வந்துள்ளார்.

இந்நிலையில், வழமையான அவருடைய நடமாட்டம் இல்லாததால், அவர் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.