பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு
பருத்தித்துறை பகுதியில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேற்று (02) அதிகாலை திருடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
பருத்தித்துறை, துன்னாலை வடக்கு பகுதியில் உள்ள வீட்டில் மோட்டார் சைக்கிள் திருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் ஒருவரின் வீட்டில் இருந்தே குறித்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது.
திருத்த வேலைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திருட்டு சம்பவம் பருத்தித்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை