மாணவன் பாலியல் துஷ்பிரயோகம் – ஆசிரியர் தலைமறைவு
மட்டக்களப்பு – நிந்தவூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவனொருவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார்.
நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி உடற்கல்வி ஆசிரியரால் பாலியல் ரீதியில் 9 ஆம் தரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இது குறித்து மறுநாள் பாதிக்கப்பட்ட மாணவன் அதிபரிடம் தெரிவித்த போதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இச்சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இச் சம்பவம் குறித்து நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார் எனத் தெரியவருகிறது.
கருத்துக்களேதுமில்லை