முட்கொம்பன் காட்டு பகுதியில் தீப் பரவல்!
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் தீயானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக எரிந்து வந்த நிலையில் நேற்றையதினம் பாரிய அளவில் தீ பரவ ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பூநகரி பிரதேச செயலாளர் தயாபரன் சென்று கண்காணித்ததுடன், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவிற்கும் தகவல் வழங்கியுள்ளார்.
தொடர்ந்து பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் தீப்பரவலைக் கட்டுப்படுத்த முயற்சித்த போதிலும், காட்டுப்பகுதிக்குள் செல்வதற்கு பாதை இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தத் தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை