சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்ஸில் கற்பித்தல் வெண்பலகை அறிமுகம்

 

நூருல் ஹூதா உமர்

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமுஃகமுஃ அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் (ஜீ.எம்.எம்.எஸ்) பெற்றோர்களின் உதவியுடன் அமைக்கப்பட்ட இலகு கற்பித்தல் வெண்பலகை அறிமுகமும், பாடசாலை குறுஞ்செய்திச் சேவை அங்குரார்பணமும், ஆசிரியர் கையேடு அறிமுகமும் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ். நஜீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இலகு கற்பித்தல் வெண்பலகையை அறிமுகம் செய்து வைத்ததுடன் பாடசாலை குறுஞ்செய்தி சேவையையும் தொடங்கி வைத்தார்.

மேலும் ஆசிரியர் கையேடுகளையும் அறிமுகம் செய்து வைத்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் தொடர்பில் ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மேலதிக ஆலோசனைகளையும் வழங்கி வைத்தார். மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்ட வலயக் கல்விப்பணிப்பாளர் மாணவர்களுடன் சிநேகபூர்வ உரையாடல்களை மேற்கொண்டு கல்வி நடவடிக்கைகளின் மேம்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரியும், கல்முனை வலய உதவிக் கல்விப் பணிப்பாளருமான என்.எம்.ஏ. மலீக், பாடசாலையின் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எந்திரி எம்.ஐ.எம். றியாஸ் அடங்களாக உறுப்பினர்கள், தொழிலதிபர் எம்.ஜே.எம். காலீத் உட்பட பிரதியதிபர், ஆசிரியர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.