இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து – 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி – ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பிரதேசத்தில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலையொன்றின் களஞ்சியசாலையில் இன்று (08) காலை ஏற்பட்ட தீயினால் வெளியான புகையை சுவாசித்ததன் காரணமாக 68 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுவாசக் கோளாறு காரணமாக மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கந்தானை புனித செபஸ்டியன் கல்லூரி மற்றும் அதன் பெண்கள் கல்லூரி மாணவிகள் குழுவொன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கந்தானையில் உள்ள இரசாயன உற்பத்தி தொழிற்சாலைக்கு சொந்தமான களஞ்சியசாலையில் இன்று காலை 7.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த தொழிற்சாலையில் கணக்காளராக பணியாற்றிய ஒருவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.