பிக்பாஸ் சீசன் – 7இல் இரண்டு வீடா ?போட்டியாளர்களும் ரெடி!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்
பிக்பாஸ் சீசன் 7 வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கின்றது.
இதற்காக உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்ட புரோமோ ஷூட் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்துள்ளது.
நிகழ்ச்சியின் புரோமோவானது இம்மாத இறுதியில் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியின் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. சனலுக்கு நெருக்கமானவர்கள், சோஷியல் மீடியாவில் வைரலானவர்கள், ஒருகாலத்தில் பரபரப்பாக இருந்து இன்று ஒதுங்கியிருக்கும் சீனியர் நடிகைகள், மாடல்கள், வெளிநாடுவாழ் தமிழர்கள், போட்டி சேனல்களில் கவனம் ஈர்த்துக் கொண்டிருப்பவர்கள் எனப் பலரிடமும் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது சீசன் 7-ல் கலந்துகொள்ள விஜய் டிவி தரப்பிலிருந்து பலரிடம் பேசி வருவதாக நாள்தோறும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
அந்ததகவல்களின் படி யார்யாரிடம் பேசியிருக்கின்றார்கள் என்ற உத்தேச தகவல்களைப் பார்க்கலாம்.
ஜக்குலின்
விஜய் டிவியின் முகம். தொகுப்பாளராக இருந்த இவரை சீரியல் நடிகையாக்கி அழகு பார்த்ததும் விஜய் டிவிதான். பிறகு ‘கோல மாவு கோகிலா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
பிருத்விராஜ்
நடிகர் பப்லு என்கிற பிருத்விராஜ். சமீபத்தில் தன்னை விட வயதில் குறைந்த பெண்ணை மணந்ததன் மூலம் பரபரப்பாகச் செய்திகளில் அடிபட்டவர். சமீபத்திய திருமண சர்ச்சையாலே விஜய் டிவி இவரைக் கன்சிடர் செய்யலாம் என்கிறார்கள்.
தினேஷ்
’மகான்’ தொடர் மூலம் விஜய் டிவி மூலமே தன் சின்னத்திரைப் பயணத்தைத் தொடங்கியவர். ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘புதுக்கவிதை’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். தற்போதும் விரைவில் ஒளிபரப்பாகவிருக்கிற ‘கிழக்கு வாசல்’ தொடரிலும் நடிக்கக் கமிட் ஆகியிருக்கிறார். சின்னத்திரை தேர்தலில் இவர் சார்ந்த அணி தோற்ற போதும் இவர் வெற்றி பெற்றது, முதலான சில விஷயங்களை வைத்து இவரது பெயர் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கான ரேஸில் அடிபடுவதாகச் சொல்கிறார்கள்.
ரேகா நாயர்
பிக் பாஸ் எப்போதுமே அதிரடி நபர்களை உள்ளே அனுப்ப ஆர்வம் காட்டி வருகிறாரல்லவா, அந்த வரிசையில் ரேகா நாயருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள்.
ஷர்மிளா
கோயம்புத்தூரில் பஸ் ஓட்டி பிரபலமான பெண் ரைவர். ஏன் எதற்கென்பதெல்லாம் முக்கியமில்லை, பொதுமக்கள் மத்தியில் சில தினங்களாவது பேசப்பட்டு விட்டால், ‘கூட்டிட்டு வாங்கப்பா அந்தச் செல்லத்தை’ என பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் அழைத்து வருவது புதிதல்ல. . அந்த வகையில் ஷர்மிளாவும் பிக் பாஸுக்குள் வர வாய்ப்பிருப்பதாக பேச்சுகள் அடிபடுகின்றன.
ஸ்ரீதர்
டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதர், என்டர்டெயின்மென்ட் கட்டகிரியில் இவரை அணுகியிருக்கிறார்கள் எனத் தெரிகிறது. காலையில் விடியும் போதே பாட்டு போட்டு டான்ஸ் ஆடியபடிதான் போட்டியாளர்கள் எழுந்திருக்கும் நிகழ்ச்சி என்பதால், பொதுவாகவே நிகழ்ச்சிக்குள் டான்ஸ் மாஸ்டர்களை இறக்கி விடுவதில் எப்போதுமே ஆர்வம் காட்டி வருகிறார் பிக்பாஸ். சாண்டி, ராபர் மாஸ்டர்கள் முந்தையை சீசன்களில் கலந்து கொண்டது நினைவிருக்கலாம். எனவே இந்த சீசனில் ஸ்ரீதர் வந்தால் ஆச்சரிப்படுவதற்கில்லை
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 குறித்து இன்னொரு முக்கியமான தகவலும் கசியத் தொடங்கியிருக்கிறது. அது, வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கலாமென்பதுதான்.
போட்டியாளர்கள் சரிசமமாகப் பிரிக்கப்பட்டு இரண்டு வீடுகளிலும் தங்க வைக்கப்படலாமாம். “ஒரு வீட்டில் இந்த சீசனுக்கான போட்டியாளர்களும் இன்னொரு வீட்டில் பழைய பிக் பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்களுமாகத் தங்க வைக்கப்படலாம்.
அதேநேரம் இந்த இரண்டு வீடு விஷயம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா அல்லது சில எபிசோடுகள் கழித்து இரண்டு வீடுகளையும் ஒன்றாக்கி விஷயத்தை உடைப்பார்களா என்பது இன்னும் முடிவாகவில்லை.
இரண்டு வீடுங்கிறதுக்காக போட்டியாளர்களின் மொத்த எண்ணிக்கை ரொம்ப அதிகமா இருக்காதுன்னும் வழக்கமான எண்ணிக்கையைப் பாதியாகப் பிரிச்சுத் தங்க வைக்கலாம்னு பேசப்படுது’’ என்கிறார்கள்.
கருத்துக்களேதுமில்லை