வீதியை புனரமைக்க கோரி மக்கள் போராட்டம்
வீதியை புனரமைத்து தருமாறு கோரி கிராஞ்சியில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (09) முன்னெடுத்திருந்தனர்.
பல்லவராஜன் கட்டு கிராஞ்சி ஊடாக வலைப்பாடு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்தே மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.30 மணிக்கு கிராஞ்சி அந்தோனியார் ஆலயத்திலிருந்து பேரணியாக கிராஞ்சி பொதுச்சந்தை வரை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை