மோட்டார் சைக்கிள் விபத்து யாழில் இளைஞர் பரிதாப பலி
!
வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் எனத் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளைஞரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை