வடக்கிற்கு அதிகாரங்களை கொடுத்தால் தீர்வு கிட்டுமா? அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி
வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் மட்டும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமா என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தனதேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் –
தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய சூழல் 50 வீதம் தற்போது உள்ளது. எஞ்சிய 50 வீதம், நாட்டிலுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்தால் கிடைத்துவிடும்.
இதனை தான் ஜனாதிபதி முதலில் சிந்திக்க வேண்டும். வறுமையால் இன்று அனைத்து இன மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனை கதைப்போம். வடக்கிற்கு அதிகாரங்களைக் கொடுப்பதால் இந்தப் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
13 ஐ கொடுத்தால் யுத்தம் முடிந்துவிடும் என்று அன்று கூறினீர்கள். யுத்தம் முடிந்ததா? 24 மணிநேரத்தில் சமாதானம் கிடைத்துவிடவில்லை.
தற்போது நீங்கள் செய்யும் செயற்பாடுகள், மீண்டும் நாட்டில் அமைதியின்மைக்குத்தான் வழிவகுக்கும்.
இனங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனில் முதலில் தேர்தலை நடத்துங்கள். – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை