சிறுவர் கழகங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா
நூருல் ஹூதா உமர்
சாய்ந்தமருது – 12 ஆம் பிரிவைச் சேர்ந்த மெகா சிறுவர் கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம், அம்பாறை ஓட்டுத் தொழிற்சாலை, சீனி உற்பத்தி தொழிற்சாலை, சிறுவர் பூங்கா போன்ற பிரதேசங்களுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி உதவியாளர் யு.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் வழிகாட்டலில் இடம்பெற்றது.
இந்த கல்வி சுற்றுலாவில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத். ஏ. மஜீத், சமுர்த்தி உதவி முகாமையாளர் எம்.எஸ்.எம்.நௌஸாத், பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.அன்சார் உட்பட சமூர்த்தி குழுக்களின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை