வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் கற்றல் உதவி!
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் ச.சண்முகரத்தினம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பகுதித்தலைவர் திருமதி தனபாலசிங்கம், ஆசிரியர்களான திருமதி ப. சிவக்குமார், திருமதி. எஸ். தவநேசன் ஆகியோரும் இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர்களான பெ.விவேகானந்தன், கோ. சிவானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை