அல்- குர்ஆனை ஓதி முடித்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் ஹிஸ்புழ்ழாஹ்!
(நூருல் {ஹதா உமர்)
புதிய காத்தான்குடி அல்-அக்ஸா ஜூம்ஆ பள்ளிவாயலின் கீழ் இயங்கும் குர்ஆன் மதரஸாவில் புனித அல்-குர்ஆனை ஓதி முடித்து பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
அல்-அக்ஸா பெரிய பள்ளிவாயலின் தலைவர் கே.எல்.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் காத்தான்குடி நகரசபை முன்னாள் உறுப்பினர் முகம்மது ஜவாஹிர், குர்ஆன் மத்ரஸாக்கள் அபிவிருத்தி ஒன்றியத்தின் உறுப்பினர்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை