மனிதக் கடத்தல் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் : கமல் குணரத்ன!
மனிதக் கடத்தல் தனிமனித உயிர்களை மட்டுமல்ல தேசிய பாதுகாப்பையும் அச்சுறுத்தும் சவாலாக மாறியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மனித கடத்தல் இரக்கமற்ற வணிகமாக மாறி வருகிறது, அது பாதிக்கப்படக்கூடியவர்களை இரையாக்கி அவர்களின் அவநம்பிக்கையைப் பயன்படுத்துகிறது.
இந்த அச்சுறுத்தலின் தீவிரத்தை உணர்ந்து, 2021-2025 ஆண்டுகளில் மனித கடத்தலைக் கண்காணிக்கவும் எதிர்த்துப் போராடவும் தேசிய மூலோபாய செயல் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
தடுத்தல், பாதுகாப்பு, வழக்கு தொடுத்தல் மற்றும் கூட்டாண்மை என எங்கள் அணுகுமுறை நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் அரசாங்கத்துடன் இணைந்து அரச சாரா நிறுவனங்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
மேலும் அரசாங்கங்களுக்கு இடையேயான நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கும், கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பணிக்குழுவுடன் இணைப்பதற்கும் தீர்மானித்துள்ளோம்.
அத்தோடு மனித கடத்தல் பற்றிய விழிப்புணர்வை கல்வி பாடத்திட்டத்தில் இணைத்துக்கொள்வதே தமது நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை