ஜனாதிபதியிடம் நாம் கோரும் கோரிக்கைகள் செவிடன்காதில் ஊதிய சங்குபோல் உள்ளன சாணக்கியன் எம்.பி. சாட்டை
ஜனாதிபதியிடம் நாம் கோரும் மக்களுக்கான கோரிக்கைகள் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே உள்ளன.
– இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
இந்த வாரம் நடந்த நாடாளுமன்ற கேள்வி பதிலின் போது என்னால் இரண்டு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதில் பல காலமாக கோரிக்கை வைத்த இரண்டாவது கேள்விக்கான தீர்வு கிடைக்கப்பெற்றுள்ளது. முதல் கேள்வி பிரதமரிடம் மாவட்ட அபிவிருத்திக்குழுக்களில் எமக்கும் நடக்கும் அநியாயங்கள் மற்றும் அட்டூழியங்கள் தொடர்பில் கோரிக்கை விடுத்தும் அவரால் இன்னும் இவற்றுக்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியதோடு. இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இரண்டாவது விடயம் பந்துல குணவர்த்தன – வர்த்தக அமைச்சருக்கானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் களுதாவளை பிரதேசத்தில் கடந்த நல்லாட்சியின் போது வர்த்தக மையம் ஒன்று அமைக்கப்படாது. இதுவரை காலமும் இந்த வர்த்தக மையத்துக்காக எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்தது. ஆனால் அதனை செயற்படுத்துவதற்கான உறுதியை வழங்கி இருந்தார்.(
கருத்துக்களேதுமில்லை