கரன்னகொட அறிக்கையின் அடிப்படையில் விசாரணை!
கடந்த ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவு புதிய விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
வன்முறைகளைத் தடுக்கத் தவறியதாகக் கூறி அப்போதைய இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உள்ளிட்ட பலருக்கு எதிரான வழக்கு பின்னர் வாபஸ் பெறப்பட்டது.
இராணுவம், பொலிஸ் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செய்த தவறுகள், வன்முறைகள் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் தொடர்பாக கடற்படையின் அட்மிரல் வசந்த கரன்னாகொட விசாரணையை மேற்கொண்டார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் செயலாளரிடம் இருந்து இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பான அறிக்கையின் பிரதி பெறப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன எனப் பொது பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.(
கருத்துக்களேதுமில்லை