பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதியுடன் அருட்தந்தை சந்துரு பெர்னாண்டோ சந்திப்பு!

பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவேவுக்கும் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு பெர்ணாண்டோவுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.

மரியாதை நிமிர்த்தமாக சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவரான அருட்கலாநிதி சந்துரு பெனாண்டோவை கொழும்பில் சந்தித்து உரையாடிய பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே ஆண்டகை, பல்வேறு விடயங்கள் தொடர்பாக இவருடன் கலந்துரையாடினார்.

கடந்த வருடத்தை விட இந்த வருடம் நாடு சில முன்னேற்றங்களை காண்பதாகவும், அனைவரும் ஒரு சமூகமாய் தொடர்ந்து இந்த நாட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், கடந்த மாதங்களில் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு சென்றதாகத் தெரிவித்த பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே ஆண்டகை, கடந்த 30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களை நேரில் அவதானித்தாகத் தெரிவித்தார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோ, நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்ல சர்வதேசத்தின் ஆதரவு தேவை என்றும் அனைவரும் ஒற்றுமையாய் இந்த நாட்டை பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.