4 ஆவது வருட பூர்த்தியும் கிரிக்கெட் கண்காட்சியும்!
நூருல் ஹூதா உமர்
சாய்ந்தமருது பிரதேசத்தில் இளம் முன்னணி வீரர்களை உள்ளடங்கிய சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டர்ஸ் நண்பர்கள் வட்ட அமைப்பினுடைய 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு அமைப்பின் புதிய சீருடை அறிமுகமும் சாய்ந்தமருது ஈஸ்டர்ன் பைட்டஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது ஸஹ்ரியன் விளையாட்டுக் கழகம் மோதிய சிநேகபூர்வ கிரிக்கெட் கண்காட்சி போட்டியும் சாய்ந்தமருது பொது மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஈஸ்ட்டர்ன் பைட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 20 ஓவர்களில் 8 விக்கட்டினை பறிகொடுத்து 199 என்ற இலக்கை எதிர் அணியினருக்கு நிர்ணயித்து இருந்தனர். இதில் என்.எம்.ஸஜீர் 39 ஓட்டங்களை 30 பந்துகளிலும் சஹீப் 33 ஓட்டங்களை 29 பந்துகளிலும் பெற்றுக் கொண்டனர் அதனை அடுத்து துடுப்பெடுத்தாடிய ஸஹரியன் அணி 18.4 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு தனது சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து தோல்வியைத் தழுவ இப்போட்டியின் கிண்ணத்தை ஈஸ்ட்டர்ன்பைட்டர்ஸ் அணியினர் தன்வசம் ஆக்கிக் கொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை