முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் பாயிஸ் நினைவேந்தல் நிகழ்வு!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட அமைப்பாளருமான மர்ஹூம் பாயிஸின் நினைவாக, துஆ பிரார்த்தனையும் நினைவேந்தல் நிகழ்வும் புதன்கிழமை கொழும்பு, சேர் ராசிக் பரீத் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
பாடசாலை சமூகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாட் நிசாம்டீன் மற்றும் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்
கருத்துக்களேதுமில்லை