புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
முல்லைத்தீவில் மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கு தலா 45,000 பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் சூ.செ.ஜான்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அருளாணந்தம் உமாமகேஸ்வரன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி) சி.குணபாலன் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 172 பேர் பயன்பெறவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை