அதிக பணம் செலவழிக்கும் அரசின் 10 அமைச்சுக்கள்! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
அதிக பணம் செலவழிக்கும் 10 அமைச்சுகளின் செலவுகளை மதிப்பாய்வு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை கட்டமைப்பை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கை தொடர்பான பத்திரமொன்றை இவ்வருட இறுதிக்குள் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் அமைப்பில் பாரிய வெற்றிடம் காணப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை