சுகாதார அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளுக்கு கல்முனை சேவைகள் பணிமனையில் பயிற்சி கருத்தரங்கு

நூருல் ஹூதா உமர்

கிழக்கு மாகாண அரச திணைக்களங்களில் அலுவலக சிற்றூழியர்கள் மற்றும் சாரதிகளாக பணியாற்றுபவர்களுக்கு கிழக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவினால் வியாழக்கிழமை பயிற்சிக் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்ற குறித்த பயிற்சிக் கருத்தரங்கில் அலுவலக சிற்றூழியர்கள், சாரதிகள் என 70 பேர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம் பிரதம வளவாளராக கலந்துகொண்டு அலுவலக பணியாளர்களின் அரச கடப்பாடுகள், பொறுப்புக்கள் மற்றும் ஒழுக்காற்று நடைமுறைகள் தொடர்பாக விரிவுரை நிகழ்த்தினார்.

இந்தப் பயிற்சிக் கருத்தரங்கில் பலநோக்கு அபிவிருத்தி செயலணி திட்டத்தின் கீழ் அண்மையில் நிரந்தர நியமணம் கிடைக்கப்பெற்றவர்களும் கலந்துகொண்டர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.