நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலை நினைவேந்தல்!

யாழ். நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள் படுகொலையின் 28ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் பாடசலையில் இடம்பெற்றது

இந்நிகழ்வில், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், உயிரிழந்தவர்களது உறவினர்கள் மற்றும் பிரதேச மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1995ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமான படையின் புக்காரா விமானம் நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது இரண்டு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் 21 மாணவர்கள் உட்பட 39 பேர் மரணமடைந்ததுடன் 35க்கும் அதிகமான மாணவர்கள் படுகாயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.