ஈஸ்டர் குண்டு தாக்குதலால்தான் கோட்டா ஆட்சிக்கு வந்தார் என்பதை ஏற்கமாட்டேன்! அடித்துக் கூறுகிறார் டிலான்
ஈஸ்டர் தாக்குதலால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தார் என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்று எமது நாட்டில் மீண்டும் இனங்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நடக்க ஆரம்பித்துள்ளன.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்குப் பதில் கூறவேண்டும். இன்று பௌத்தத்தை வைத்து அரசியல் செய்வது அதிகரித்துள்ளது.
எவ்வளவு தூரத்துக்கு என்றால், புத்த பெருமான் பிறந்ததே இலங்கையில் தானாம். புத்தப்பெருமான் இங்கா பிறந்தார்?
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், இனிமேல் இவ்வாறான தாக்குதல் ஒன்று இடம்பெறாமல் இருக்க அனைவரும் செயற்பட வேண்டும். – இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை