சுங்கத் திணைக்களம் பறிமுதல் செய்த பொருள்களை ஏலத்தில்விட தீர்மானம்! ரஞ்சித் சியாம்பல பிட்டிய தகவல்
இலங்கை சுங்க திணைக்களத்தினரால் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை இணையத்தில் ஏலம் விடுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனப் பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருகொடவத்த பகுதியில் உள்ள சுங்க முனையத்துக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டிய கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போதே அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.
இதுவரையில் 18 ஆயிரத்து 765 வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை