பெற்றோர்களின் கஷ்டங்களை மையமாகக் கொண்டு தென்கிழக்கு பல்கலையால் ‘செயல்’ குறுந்திரைப்படம்!

 

நூருல் ஹூதா உமர்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை மற்றும் கலாசார பீட மாணவ பேரவையின் ஏற்பாட்டில் பீட மாணவர்களின் புது முயற்சியால் உருவாகி திரையிடப்பட்ட செயல் எனும் குறுந்திரைப்படத்தின் அறிமுக விழா கலை மற்றும் கலாசாரபீட மாணவ பேரவையின் தலைவர் ஸையித் உர்பி தலைமையில் கலை கலாசாரபீட கலையரங்கில் நடைபெற்றது.

இந்தக் குறுந்திரைப்பட அறிமுக நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன் மேலும், கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர், பல்கலைக்கழக மாணவ நல சேவைகள் மைய பணிப்பாளர் கலாநிதி எம். றிஸ்வான், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துறை தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், உதவி விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக பொறியியலாளர் எம்.ஐ. பஸீல், கலை கலாசார பீடத்தினுடைய சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.அஸ்ஹர் மற்றும் நிர்வாக கல்வி சார் கல்வி சாரா உத்தியோகத்தர்கள், இஸ்லாமியக் கற்கை மற்றும் அரபு மொழி பீட மாணவத் தலைவர் மற்றும் மாணவ மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

கலை கலாசார பீட மாணவ பேரவை சார்பாக பல்கலைக்கழக அழகையும், பல்கலைக்கழக வாழ்வையும், நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் சந்திக்கும் பொருளாதார சிக்கல்களையும் பற்றி கருவாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த குறுந்திரைப்படம் தொடர்பான விமர்சனத்தை சமூகவியல் துறைத்தலைவர் பேராசிரியர் எஸ்.எம். அய்யூப் வழங்கினார். நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், கலை மற்றும் கலாசார பீட பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

Exif_JPEG_420

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.