ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை! தினேஸ் குணவர்த்தன தெரிவிப்பு
ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்களுக்கு 25,000 ரூபா கொடுப்பனவை ஓய்வூதியத்துடன் 50,000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனை பிரதமர் மற்றும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தனவால் நாடாளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற சமீபத்திய கோட்பாடு புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள இந்த பிரேரணை அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த ஓகஸ்ட் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அது அங்கீகரிக்கப்பட்டது.
கருத்துக்களேதுமில்லை