மன்னாரில் அஞ்சல் பணியாளர்கள் போராட்டம்!
கொழும்பில் ஒருங்கிணைந்த தபால் சங்கம் ஏற்பாடு செய்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மன்னார் அஞ்சல் பணியாளர்களால் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மன்னார் அஞ்சலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் சம்பள முரண்பாடு தீர்த்தல்,வாழ்க்கைச் செலவாக 20,000 ரூபாயாக உயர்த்தல்,பதவி உயர்வை வழங்கல்,வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை