பிரமித்த பண்டார தென்னகோனுக்கு ‘பொப்பி மலர்’ அணிவித்து கௌரவம்
இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோனுக்கு ‘பொப்பி மலர்’ அணிவித்தனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வின் போது மேற்படி சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்ததுடன் பொப்பி மலரை அணிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் இலங்கையின் ஓய்வுபெற்ற படைவீரர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரிக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடலும் இடம்பெற்றது.
இலங்கையின் ஓய்வு பெற்ற படைவீரர்கள் சங்கம் உயிர்நீத்த படைவீரர்களை நினைவுகூரும் வகையில் பொப்பி மலர் தினத்தை ஆண்டுதோறும் அனுஷ்டிக்கிறது.
‘பொப்பி மலர் தினம்’ முதலாம் உலகப் போரின் போது உயிர் தியாகம் செய்த ஆயுதப் படை வீரர்களை நினைவுகூரும் வகையில் பொதுநலவாய அங்கத்துவ நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை