தினேஸ் சாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவு பிறப்பிப்பு
மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஸ்சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு சிஐடியினருக்கு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரேதப்பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதால் தினேஸ் சாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வர்த்தகர் தினேஸ்சாப்டரின் மரணம் குறித்த மர்மம் இன்னமும் விலகாத நிலையில் மே 25 ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நீதித்துறையினர் பொலிஸாரின் கண்காணிப்பின் கீழ் தினேஸ்சாப்டரின் உடல் மீண்டும் எடுக்கப்பட்டது.
வர்த்தகர் தினேஸ்சாப்டர் கடந்த வருடம் டிசெம்பர் 15 ஆம் திகதி பொரளை கனத்தையில் அவரின் காருக்குள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார் – மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.
கருத்துக்களேதுமில்லை