மேலும் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்க கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானால் நடவடிக்கை

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் நிலவி வந்த ஆசிரியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் கிழக்கில் 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்க மாகாண பொது சேவை ஆணைக்குழு கையொப்பம் இடப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் செந்தில் தொண்டமானால் கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தற்போது 700 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கிழக்கு மாகாணத்தில்  நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாகவும், கல்வித் துறையை மேலும் மேம்படுத்தும் நோக்கிலும் இந்நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.