சுன்னாகம் லயன்ஸ் கழகத்தினரினால் முன்பள்ளி மாணவர்களுக்கு போசாக்கு!

 

சுன்னானம் லயன்ஸ் கழகத்தின் வலயத் தலைவர், பிராந்தியத் தலைவர் வருகைகள் நேற்று (திங்கட்கிழமை) கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் கந்தரோடையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விருந்தினர்களாக வருகைதந்த வலயத் தலைவர் லயன் க.டினேஸ், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ் ஆகியோர் கந்தரோடை கற்பக்குணை கலைமதி முன்பள்ளி மாணவர்களுக்கு லயன் க.டினேஸ் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைக்கும் லயன் பா.மரியதாஸ் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் என இந்த வருடம் முடிவுறும் வரைக்கும் போசாக்கு உணவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

அதன்படி அதற்கான முற்கட்ட உதவியாக ஒரு கிழமைக்குத் தேவையான போசாக்குணவுக்கான நிதியுதவியை லயன் க.டினேஷ் முன்பள்ளி ஆசிரியரிடமும் லயன் பா.மரியதாஸ் கலைமதி சனசமூக நிலைய நிர்வாகசபை உறுப்பினரிடமும் வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.