இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் – உலக வங்கி

ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதற்கான இலங்கையின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெர்வோஸ்க்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் பல விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நியூயோர்க்கில் உள்ள உலக வங்கி தலைமையகத்தில் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது, உலக வங்கியின் தலைவர் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதி செய்யவும் ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.