அம்பாறையில் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அதிகரித்து வரும் சமூக சீர்கேடுகள்!
அம்பாறை மாவட்டத்தில், சுனாமியினால் சேதமடைந்து மக்களினால் கைவிடப்பட்டுள்ள வீடுகளில் அண்மைக்காலமாகப் பல சமூக சீர்க்கேடான விடயங்கள் அரங்கேறி, வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.
குறிப்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் காணப்படும் கைவிடப்பட்டுள்ள வீடுகளில், உள்ளுர் வாசிகளும், வெளியூரைச் சேர்ந்த சிலரும், போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுவதோடு, பாலியல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவருகின்றனர் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த பகுதியானது விசப்பாம்புகளின் வாழிடமாக உள்ளதாகவும் இதன் காரணமாக அப்பகுதியில் வாழும் மக்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவ்விடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்வீடுகளில் இடம்பெறுகின்ற சட்டவிரோதமான செயற்பாடுகளை கட்டுப்படுத்த முன்வர வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை